நிதர்சனமான உண்மை
வாடிக்கையாளர்களுக்கு வணக்கம். இது விளம்பரத்திற்கான தேடலோ அல்லது தொழில் வளர்ச்சிக்காக உண்டான தேடலோ அல்ல. நாம் வாழும் பூமி நாம் மட்டுமே வாழ்வதற்கு அல்ல. நாமும் நமது குடும்பத்தினரும் எந்த அளவிற்கு இந்த சமுதாயத்தில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணர்த்தவே இச்செய்தி. நாம் நமது குடும்பம் மற்றும் நமது உடமைகள் பாதுகாப்பாக இருக்கிறதா இல்லையா என்பதை யோசித்துப் பார்த்தால் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. எனவே பாதுகாப்பு என்னும் விஷயத்தில் நாம் அலட்சியம் கூடாது. மனிதர்கள் கடவுளை நினைத்து பயந்த காலம் போய், மனிதர்கள் மனிதர்களை கண்டு பயப்படுகின்ற காலமாக மாறிவிட்டது. இதுவும் நிதர்சனமான உண்மைதான் என்பதை மனது ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
எனவே பாதுகாப்பு என்னும் விஷயம் வரும்பொழுது மனிதன் அறிவியல் மற்றும் அறிவியல் சார்ந்த சாதனங்களை நம்பியே வாழ்கிறான்.
We are here to protect you
கண்காணிப்பு கேமரா
நாம் தூங்கினாலும் நம் நினைவுகள் தூங்காது என்பது பழமொழி .நாம் தூங்கினாலும் கண்காணிப்பு கேமரா தூங்காது என்பது புதுமொழி. ஆம் கண்காணிப்பு கேமரா சாதனம் என்பது மனிதன் வாழ்க்கையில் பிரிக்க முடியாத பாதுகாப்பு கருவியில் ஒன்று. எத்தனையோ கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு கண்காணிப்பு கேமராவே சாட்சியாக விளங்குகிறது. பொதுமக்களுக்கு வேண்டுகோள் என்னவெனில் வீட்டிற்கு வீடு சிசிடிவி கேமரா பொருத்தங்கள் என்பது காவல் துறையினரின் கோரிக்கையாக உள்ளது. அப்படியே ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் காவல்துறையினருக்கு கண்காணிப்பு கேமராவில் மூலம் சிறு துப்பு துலங்கினால் கூட போதும் மற்றதை காவல்துறையே பார்த்துக் கொள்ளும்.
அலட்சியம் கூடாது
பாதுகாப்பு என்னும் விஷயத்தில் நாம் அலட்சியம் கூடாது. சிசிடிவி கேமரா பொருத்த வரை சாதாரண எலக்ட்ரிஷன் இலிருந்து இன்ஜினியர்கள் வரை, யார் வயரிங் செய்து இன்ஸ்டால் செய்தாலும் படமும் தெரியும் ரெக்கார்ட்டும் ஆகும் .ஆனால் அது எந்த அளவிற்கு பாதுகாப்பாக ஒயரிங் செய்து இருக்கிறார்கள், எப்படி இன்ஸ்டால் செய்து இருக்கிறார்கள் என்பதை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வதே இல்லை. நமக்காக 24 மணி நேரமும் உழைக்கும் இந்த காவலனை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு கட்டுரை.
My Projects
அடிப்படை விசயங்கள்
கண்காணிப்பு கேமராவை பொறுத்தவரை சரியான சர்வீஸ், சரியான இன்ஸ்டாலேஷன், சரியான சாஃப்ட்வேர் , இணைய இணைப்பு ஆகியவை முக்கியம்.சிலர் விஷயம் தெரியாதவர்களிடம் ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்து கொட்டேஷன் என்ற பெயரில் ஏதோ ஏதோ எழுதி பணம் வசூலிப்பதை பார்த்திருக்கிறேன். நமக்கு அடிப்படை விஷயங்கள் தெரியாமல் இருப்பதால் வீண் விரயச் செலவு தான். வயரிங் மிக முக்கியம். அவை சேனல்களில் சரியாக பொருத்தப்பட வேண்டும். வெயில், மழைக்கு பொருத்தமான அவுட்டோர் கேமரா இருக்க வேண்டும். வெளிச்சம், இருட்டு பார்த்து இண்டோர் கேமரா பொருத்த வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு கேமரா இன்ஸ்டாலேஷன் செய்பவர்கள் அடிப்படை விசயங்களை கூட கூறுவதே இல்லை.
பாதுகாப்பு
வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அனைவருக்குமே மிகவும் நல்லது. நாம் வீட்டில் இல்லாத சமயம் உங்கள் வீட்டை யார் பாதுகாப்பது என்று சிந்தித்து இருக்கின்றீர்களா? அந்த நேரங்களில் உங்கள் பொருட்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளார்களா என்பதை தெரிந்து கொள்ள உங்களுக்கு உதவுவது கண்காணிப்பு கேமரா மட்டுமே.